Page:Tamil proverbs.pdf/46

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
28
பழமொழி.
  1. அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததுபோல.
    Like one standing on a grindstone and looking at Arundathi.
    Arundathi is a star in the Great Bear regarded as the wife of Vasishta, a pattern of chastity. This star is pointed out to the bride at the marriage ceremony.

  2. அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.
    She will bring forth a king on the grindstone.
    During the time of child-birth it is not uncommon for the mother to be seated on a grindstone.

  3. அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.
    As a leaf-plate sought advice when the grindstone and its roller were flying in the air.

  4. அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
    If a thievish woman eat the cream will there be any butter?

  5. அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.
    The strife of Ammai, (a village goddess) has begun, boil and present (rice.)

  6. அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?
    When will my mistress die? when shall I get her blanket?

  7. அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட்கயிற்றுக்கும் சரி.
    The yarn spun by the old dame will only just suffice to form waist-string for her grandson.

  8. அம்மையார் பெறுகிறது அரைக்காசு, தலை சிரைக்கிறது முக்காற்காசு.
    Three fourths of a cash is demanded for shaving the head of a old woman worth only half a cash.

  9. அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.
    What sorrow has the old dame? that of raggedness.