Page:Tamil proverbs.pdf/47

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
29
  1. அம்மையாரே வாரும், கிழவனைக் கைக்கொள்ளும்.
    Come, old lady, and receive the old man.

  2. அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
    He flies at his neighbours’ property as a demon.

  3. அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு.
    Be blind as regards your neighbours’ property.

  4. அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.
    No one escapes the decree of Brahma.

  5. அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
    The writing of Brahma will not fail in the least.

  6. அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.
    Even the Airai (small as it is) will give itself airs if it be not mixed with the food.

  7. அயோக்கியர் அழகு அபரஞ்சித் சிமிழில் நஞ்சு.
    Beauty in the unworthy is poison in a casket of fine gold.

  8. அய்யன் அளந்தபடி.
    As God measured.

  9. அய்யாவையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?
    Is Appaiyangar the dispenser of Aiyavaiyar’s gruel?

  10. ஹர ஹர என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதோ?
    Whether is greater as regards merit, to say Hara, Hara, or to give to the mendicant?

  11. அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?
    What matters it whether a demon or a man rules?

  12. அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.
    To play draughts without a board and to speak without a knowledge of the shastras are alike.