Page:Tamil proverbs.pdf/490

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
472
பழமொழி.
  1. போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா?
    When an ox is accustomed to eat at a heap, will it be satisfied with a handful?

  2. போர்த்தொழில் புரியேல்.
    Do not practise the art of war.

  3. போர் பிடுங்கிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.
    It is said that those who steal from a corn-stack, will frighten those who glean stealthily.

  4. போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.
    It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.

  5. போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.
    It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.

  6. போனகம் என்பது தான் உழைத்து உண்டல்.
    That which one eats as the fruit of his own labour, is properly called food.

  7. போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.
    Like inviting a fever that has subsided, by giving acids.

  8. போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
    He lacks sense who broods over the past.

  9. போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
    There is no one to seek the lost cow, none to pay the hire of the cowherd.