Page:Tamil proverbs.pdf/493

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
475
  1. மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.
    Like going on a pilgrimage to Mecca, and catching a crane.

  2. மங்கமாரி வந்தார் தங்க மழை பெய்தது.
    Montgomery came, and it rained fine gold.

  3. மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.
    In time of scarcity, mangoes, and in a season of plenty, tamarind fruit, are abundant.

  4. மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள் கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
    If the damsel is polluted she may be cleansed by the ganges, but if the ganges be polluted whither can she go?

  5. மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?
    If such be the condition of the young fish, what will be that of the mother?

  6. மச்சானைப் பார்க்க உறவும் இல்லை, மயிரைப் பார்க்க கறுப்பும் இல்லை.
    No friendship superior to that of a cousin, nothing blacker than hair.
    The word மச்சான் is used for a brother-in-law, and also for a maternal uncle’s son.

  7. மச்சான் செத்தால் மயிறு போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.
    If my brother-in-law die I care not a hair, his cumbly mattress will be mine.

  8. மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.
    If the roof be destroyed, the house will not answer for a hut.

  9. மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.
    Though one may not worship god by bathing him, and scattering flowers on him, we are taught to keep him in mind.