Page:Tamil proverbs.pdf/494

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
476
பழமொழி.
  1. மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.
    A prudent youth is superior to a stupid old man.

  2. மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.
    A stupid question needs no answer.

  3. மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.
    Besides a choultry, there is nothing,—not even water.

  4. மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.
    After the choultry has been destroyed, he asks the way to the flower garden.

  5. மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?
    Are you about to behead one upon whom you have forced mango fruit?

  6. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
    If you have money in your waist-cloth, you may be afraid on the way.

  7. மடியைப் பிடித்து கள்ளை வார்த்து மயிரைப் பிடித்து காசு வேண்டுகிறதா?
    Having forced one to take toddy, do you seize him by the hair and demand payment?

  8. மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
    Moderation in eating exhilerates the mind.

  9. மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?
    Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?

  10. மட்டு இல்லாமற் கொடுத்தாலும் திட்டுக் கேட்கல் ஆகாது.
    Though he gives liberally, it is not right to hear his abuse.

  11. மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.
    Palm-stem charcoal and Madappallis are not to be trusted.