Page:Tamil proverbs.pdf/495

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
477
  1. மணலின்மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்; அதுபோல, பொல்லாதவர்களுக்குச் செய்த உபகாரம் மறைந்துபோம்.
    Drops of rain falling on sand will instantly disappear, in like manner favours shewn to the wicked will be soon forgotten.

  2. மணற் சோற்றில் கல் ஆய்வதுபோல.
    Like picking out stones when eating a dish of sand.

  3. மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.
    So to govern a kingdom as not to move even the tongue of a bell.

  4. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    May one descend into a river relying on a mud horse?

  5. மண்டைக்குத் தகுந்த கொண்டை போடவேண்டும்.
    The knot of hair must be proportioned to the size of the head.

  6. மண்டையில் எழுதி மயிரால் மறைத்ததுபோல.
    Like writing on the skull and covering it with the hair.

  7. மண்டை உள்ளவரையில் சளி போகாது.
    As long as the head remains phlegm will abide.

  8. மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.
    They may have house and grounds who know how to take care of them.

  9. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.
    Dried cow-dung is the proper form of wedding cake, when the bridegroom is made of sand.

  10. மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.
    Made of earth, thou art earthy.

  11. மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.
    Whilst on earth pervert not judgment, in the case of a woman.

  12. மண்ணைத் தின்றாலும் மறையத் தின்.
    Though what you may eat be sand, eat it in a secluded place.