Page:Tamil proverbs.pdf/549

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
531
  1. வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.
    A thousand by his sword, a thousand by his arm.

  2. வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?
    Living under the conopy of heaven, may we be afraid of rain?

  3. வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?
    Will he whom heaven and earth cannot contain, dwell in wood and stone?

  4. வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.
    The heavens produced, and the earth sustained.

  5. வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?
    When you go to gaze at the heavens, do you find any impediment?

  6. வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
    When it rains abundantly, liberality will abound.

  7. வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.
    When drought prevails charity fails.

  8. வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்
    What can the world do in return for the favours of heaven?

வி.

  1. விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.
    If the sky withholds rain, not a blade of grass can be seen.

  2. விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
    It is said that a devout crane died from wandering about.

  3. விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
    If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low born will flourish.