Page:Tamil proverbs.pdf/558

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
540
பழமொழி.
  1. விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.
    If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.

  2. விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.
    A playful child will not fear venomous reptiles.

  3. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
    Originating in playfulness it ended seriously.

  4. விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.
    Things prepared by playful children never come home.

  5. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
    The future crop is known in the germ.

  6. விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற்பணம் விற்கும்.
    If a crane cross a firewood man from left to right, what he sells ordinarily for a fanam, will fetch a fanam and a quarter.
    If a crow fly on the right of one going out of his house, he is sure to meet with success. If on the left, he will not obtain what he seeks.

  7. விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?
    Will firewood not ignite, because crooked?

  8. விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன் ?
    Why feed a bullock after it is sold?

  9. வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.
    When times are inauspicious, one does not know his way home.

  10. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
    He who sows actions will reap actions, he that sows millet will reap millet.