Page:Tamil proverbs.pdf/565

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
547
  1. வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.
    She who is not restrained by modesty, is not a woman of superior birth.

  2. வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்.
    A woman without shame is worthless.

  3. வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்
    Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.

  4. வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?
    What signifies a veil to a widow who goes about without shame?

  5. வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?
    Will he who is afraid of disgrace quarrel?

  6. வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.
    He that is afraid of disgrace is afraid of running into debt.

  7. வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.
    Having sold his sense of shame, he carries its price under his arm.

  8. வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.
    The whole body of the shameless, is dirty.

  9. வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.
    He is too weak to cut, and unwilling to go out.

  10. வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?
    Would you let loose a frisky calf in an open plain?

  11. வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினதுபோல,
    Like irrigating for no purpose.

  12. வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.
    When he is told to reap and bring, he pounds and brings.