Page:Tamil proverbs.pdf/566

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
548
பழமொழி.
  1. வெட்டிவேரில் விசிறியும், விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.
    Make a fan of the cuscus root, and a tat of sweet scented grass root.

  2. வெட்டின இடத்தில் சலம் ஊறும், வீடு கட்டின இடத்தில் நடை ஏறும்.
    Where the ground is dug water will spring, where a house is built there will be an entrance.

  3. வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று
    There is water all over the path, young grass all over the sod.

  4. வெட்டிவெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.
    Though you may examine by continued digging, you will get only coin of coal in abundance.

  5. வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?
    Did they give birth to me in vain, and throw me at a hedge?

  6. வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.
    Let the Vettiyan and the corpse embrace each other, and weep.

  7. வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது கட்டின வேலியும் தாண்டமாட்டாது.
    It neither drinks in an artificial reservoir, nor leaps an artificial hedge.

  8. வெட்டினவனுக்கு ஒரு கேணி வீணாதி வீணனுக்குப் பல கேணி.
    He that has sunk a public well has only one, a notorious idler has many.

  9. வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.
    One cut, two slices.

  10. வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.
    The wicked speak harshly.

  11. வெட்டெனப் பேசேல்.
    Do not speak harshly.