Page:Tamil proverbs.pdf/581

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
563
  1. வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு, சாலையைப் பார்த்து ஊருக்கு நட.
    After ascertaining her domestic skill take a girl in marriage, proceed to your village taking care not to miss the road.

  2. வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.
    No one cultivates the vél-Acacia arabica-tree.

  3. வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?
    When a monstrous evil betides one, how can it be removed?

  4. வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்
    To an elephant small objects appear great.

  5. வேழம் முழங்கினாற்போல.
    Like the thundering of an elephant.

  6. வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.
    Speak opportunely, set out on a journey on an auspicious day.

  7. வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும்.
    Half a cash at a time will, in the long run, amount to thousands of gold.

  8. வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.
    A child who does not help in an emergency is like the fruit of the screw-pine.

  9. வேளையோ அவவேளை வீட்டிலோ அன்னம் இல்லை.
    The time is unfavourable, at home there is no rice.

  10. வேறே வினை தேவை இல்லை, விளையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை.
    There is no need of another evil, it is not necessary to go to the temple of the goddess of misfortune.

  11. வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.
    Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.