Page:Tamil proverbs.pdf/61

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
43
  1. அவன் எனக்கு அட்டமத்துச்சனி.
    To me he is Saturn in the eighth sign.
    The most malignant of enemies.

  2. அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
    He seeks friendship and prays for a skin.

  3. அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்.
    What can his teacher do if he ruin himself?

  4. அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.
    What he has scored with his feet I efface with my tongue.

  5. அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?
    Do you consider him as a green-herb nipped off?

  6. அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.
    He took another’s hand and struck his eyes.

  7. அவன் சிறகில்லாப் பறவை.
    He is a bird without wings.

  8. அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.
    He is preparing to cook my head.

  9. அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.
    Every one is responsible for his own actions.

  10. அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.
    He aims to scatter me to the winds.

  11. அவன் எரிபொரியென்று விழுகிறான்.
    He breaks out saying burn him, fry him.
    Said of one who suddenly bursts into a rage.

  12. அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.
    Having run and sung, he at length sank like the pulse.

  13. அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன்.
    He is the man who encountered and fought the champion.