Page:Tamil proverbs.pdf/62

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
44
பழமொழி.
  1. அவன் கொஞ்சப்புள்ளியா?
    Is he a man of limited wealth?
    Spoken of a slovenly miser.

  2. அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா?
    Can fire be kindled in mid-air?
    No, except by the Almighty "who holds the lightning in his hand and tells it whom to strike."

  3. அவித்த பயறு முளைத்த கதைபோல.
    Like the story of the germination of boiled peas.

  4. அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.
    Better is the hatred of the wise than the friendship of fools.

  5. அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.
    What can rice do? it can work the five senses, what can wealth do? it can subdue the world.

  6. அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன்.
    One who belongs to this convention and to that convention.

  7. அவ்வளவு இருந்தால் அடுக்கிவைத்து வாழேனோ.
    If I had so much should I not arrange my chatties earthen cooking vessels and prosper.
    Spoken regretfully of succour which ought to be and is not afforded.

  8. அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.
    In beauty equal to natural coral, at home a cow-dung basket.

  9. அழகிற்கு மூக்கை அறுப்பார் உண்டா?
    Are there any who cut the nose for the sake of beauty.

  10. அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும்.
    Beauty will sit and weep, fortune will sit and eat.

  11. அழகுப்பெண்ணே காற்றாடி உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி.
    O beautiful maid, frail kite, the comedian calls you.
    Spoken of a female whose demeanour is inconsistent with modesty.