Page:Tamil proverbs.pdf/77

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
59
  1. ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்கிறான் குரு.
    The spiritual guide observed, I will teach you how to fly through the air, take me up and convey me to the other side of the river.

  2. ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.
    A powerful thunder-clap will occasion tremor.

  3. ஆகாயமட்டும் அளக்கும் இருப்புத்தூணைச் செல்லரிக்குமா ?
    Will white ants destroy an iron pillar that reaches to the clouds?
    The proverb was used by Sita when speaking to Ravana.

  4. ஆகாயம் பார்க்கப்போயும் இடுமுடுக்கா ?
    Is there not sufficient space for one to go and look at the sky?

  5. ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?
    Can the air be bit so as to leave a mark?

  6. ஆகாயம் பெற்றது, பூமி தாங்கினது.
    The sky brought forth, the earth supported.

  7. ஆகிறகாலத்தில் அவிழ்தம் பலிக்கும்.
    If favoured by fortune medicine will take effect in due time.

  8. ஆகுங்காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்
    In times of prosperity, even a slave woman may bring forth a female child.

  9. ஆகுங்காய் பிஞ்சிலயே தெரியும்
    A sound fruit may be known when it begins to set.

  10. ஆகுங்காலம் ஆகும், போகுங்காலம் ஆகும்.
    In auspicious times it succeeds, in inauspicious times it fails.

  11. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா?
    Will he who waited till it was cooked, not wait till it cools?

  12. ஆக்கிற் குழைப்பேன், அரிசியாய் இறக்குவேன்.
    Should I cook I shall spoil the rice, either by under or over doing it.