Page:Tamil proverbs.pdf/78

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
60
பழமொழி.
  1. ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரை நாழிகையில்.
    Rule will last but half an hour where discipline and authority do not exist.

  2. ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.
    If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.

  3. ஆங்காரிகளுக்கு அதிகாரி.
    The chief of the proud.

  4. ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.
    She exclaims Sangará, Sangará at death having through life been given up to lewd behaviour.

  5. ஆசரித்த தெய்வம் எல்லாம் அடியோடே மாண்டது.
    All the deities that were venerated have entirely perished.

  6. ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்துபோனேன்.
    By being associated with the base and by speaking hypocritically I have forfeited my dwelling-place.

  7. ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.
    The virtuous are not affected by blessing and cursing.

  8. ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.
    His mind is fixed upon her, his body is on the mat.

  9. ஆசை அறுபது நாள், மோகம் முப்பதுநாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
    Sixty days of excessive desire, thirty of enjoyment; when the ninety are over, the remaining time is as useless as a worn-out broom.

  10. ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.
    If evil desire spring not sorrow will not approach.