Page:Tamil proverbs.pdf/86

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
68
பழமொழி.
  1. ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம் துணியைப்போட்டுத் தாண்டு.
    Neither swearing nor oaths are required, put down the cloth and stride over it.

  2. ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
    The austerity of those who are ignorant of the Supreme is as profitless as soil at the foot of a dead tree.

  3. ஆண்டாருக்குக் கொடுக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?
    Do you give to mendicants, or to the hard shell of the bottle-gourd?

  4. ஆண்டார் இருக்குமட்டும் ஆட்டும் கூத்தும்.
    While the head of a family lives, prosperity may be enjoyed.

  5. ஆண்டிகள்கூடி மடம் கட்டினாற்போல.
    Like mendicants combining to build a choultry.

  6. ஆண்டி கிடப்பான் மடத்திலே சோளிகிடக்கும் தெருவிலே.
    The mendicant lies in the choultry and his bag in the street.

  7. ஆண்டிக்கு இடச்சொன்னால் தாதனுக்கு இடச்சொல்லுகிறான்.
    When told to give rice to the Saiva mendicant, he says give it to the Vaishnava mendicant.

  8. ஆண்டிக்கு வாய்ப்பேச்சு பார்ப்பானுக்கு அதுவும் இல்லை.
    To the religious mendicant a word, to the brahman not even that.

  9. ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் அவம்.
    The five children borne by the mendicant’s wife are all weaklings.

  10. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
    When the son of a mendicant assumes a mendicant’s profession, he will blow his conch at the proper time.

  11. ஆண்டியை அடித்தானாம் குடுவையை உடைத்தானாம்.
    It is said that he beat the mendicant and broke his alms-dish.