70
பழமொழி.
-
- ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின்மேற் குறைசொல்லுவான்.
- The coward blames his weapon.
-
- ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.
- A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.
-
- ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?
- Will a chetty (a merchant,) take his departure by a river without gain?
-
- ஆதாயமில்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
- Will a chetty dam up a river and drain out its waters for nothing?
-
- ஆதினக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
- Is a man possessed of landed property without a legal instrument?
-
- ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- The over-hasty is wanting in sense.
-
- ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
- Will the over-hasty be nice about family pedigrees?
-
- ஆத்திரப்பட்டவனுக்கு அப்போது இன்பம்.
- The hasty is gratified at the instant.
-
- ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
- While his mother is in extremity, her grown up son is crying for butter-milk.
-
- ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.
- He who possesses no property is but half a man.
-
- ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
- A man of wealth is the slave of his possessions.
-
- ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.
- The wealthy are not exposed to immediate ruin.