Page:Tamil proverbs.pdf/90

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
72
பழமொழி.
  1. ஆமுடையானைக் கொன்ற அறநீலி.
    A most abandoned woman who murdered her own husband.

  2. ஆமுடையான் செத்தபின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது.
    The woman became wise after the death of her husband.

  3. ஆமுடையானுக்கு அழுதவளுக்கு அந்துக்கண்ணன் வந்து வாய்த்தான்.
    A blear-eyed man became the husband of a woman who had been crying for one.

  4. ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாளென்று அழுகிறேன்.
    I do not weep because my husband has beaten me, but because my rival will laugh at me.

  5. ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.
    When, in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.

  6. ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும், குருவில்லா ஞானமும் போல் இருக்கிறான்.
    The husband resembles a merry, making without food and knowledge without a competent teacher.

  7. ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.
    No matter what the circumambulation of a husband may be, he enters his house by the door.

  8. ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குக் பொய் சொல்லலாமா?
    True, you may utter a falsehood to your husband, but can you deal falsely with the hearth?

  9. ஆமுடையானை வைத்துக்கொண்டல்லோ அவசாரியாடவேண்டும்?
    It is while she has a husband, is it not, that a woman should play the harlot?