Page:Tamil proverbs.pdf/91

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
73
  1. ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?
    Of what use is the favor of a midwife to her who has lost her husband?

  2. ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்.
    If your husband be a powerful man, you may ascend the dunghill to fight.

  3. ஆமை திடரில் ஏறினாற்போல.
    As if a tortoise or turtle crept up a hillock.

  4. ஆமையுடனே முயல் முட்டையிடப்போய்க் கண்பிதுங்கிச் செத்ததாம்.
    It is said that when the hare went with the tortoise to lay eggs it strained its eyes out and died.

  5. ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது.
    It is not difficult for one to win who understands the tricks of dice.

  6. ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி.
    The brahmanicide is the witness of the custom officer.

  7. ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.
    The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five.

  8. ஆயத்திலும் நியாயம் வேண்டும்.
    Even in gain justice is required.

  9. ஆயத்துக்குக் குதிரை கீயத்துக்குக் குட்டி.
    Hire for the horse, nothing for its colt.

  10. ஆயத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினதுபோல.
    Like swimming the river to avoid the tax.

  11. ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.
    Do not commit injustice at the custom-house.