74
பழமொழி.
-
- ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.
- One grain destroying insect will consume a thousand grains of rice.
-
- ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.
- As a swan in the midst of a thousand crows.
-
- ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.
- Like a single stone thrown at a thousand crows.
-
- ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்குமா.
- Can a thousand props support the universe?
-
- ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.
- A thousand bonds may equal the strength of an elephant.
-
- ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.
- Though a thousand times admonished, a faithless woman will not become a faithful wife.
-
- ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.
- Like one born with a thousand stretched out his legs with five-hundred.
-
- ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.
- Beauty is found only in one of a thousand.
-
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- The combined light of a thousand stars is not equal to a single moon.
-
- ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
- A thousand sixteenths make sixty-two and a half.
-
- ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார் துணிபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான்.
- He whose fortune amounts to thousands is quiet, while the rag-gatherer leaps for joy.
- Dignity is characteristic of the worthy, and levity of the worthless.