Page:Tamil proverbs.pdf/93

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
75
  1. ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
    Though it may bring in thousands, the occupation of a tax-gatherer is bad.

  2. ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதச்சா ஆகாது.
    Although one may live a thousand years an unnatural death is bad.

  3. ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்.
    Although one has acquired a thousand arts, he will still feel the necessity of earthly show.

  4. ஆயிரம் பெயரைக் கொன்றவன் அரைவைத்தியன்.
    He who has killed a thousand persons is half a doctor.

  5. ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
    Though a thousand may thereby be obtained, impetuosity is not good.

  6. ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.
    Though a thousand persons unite, they cannot kill a single grain-insect.

  7. ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?
    After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?

  8. ஆயிரம் அரைக்காற்பணம்.
    A thousand eighths of a fanam.

  9. ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
    Half a letter is equal to a thousand words.

  10. ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக்கொண்டால் நஷ்டமா?
    Will it prove a loss if one of a thousand cows kicks?