76
பழமொழி.
-
- ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.
- Although born of a father possessed of a thousand palmira trees, he has not a fibre with which to pick his teeth.
-
- ஆயிரம் பாம்பினுள் ஒரு தேரை அகப்பட்டாற்போல.
- Like a toad among a thousand serpents.
-
- ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பணத்துச் சவுக்கு.
- Half a fanam to buy a whip for a horse worth thousands of gold.
-
- ஆயிரம் நற்குணம் ஒரு லோபகுணத்தால் கெடும்.
- A single avaricious desire will destroy a thousand good qualities.
-
- ஆயிரம் பொன்பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும்.
- Even a horse worth thousands of gold may require a whip.
-
- ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
- Tell lies by the thousand and build a temple.
-
- ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.
- One of a hundred makes a skilful swords-man.
-
- ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?
- What! strike the unarmed?
-
- ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறதுபோல.
- Like seeking a weapon in the face of battle.
-
- ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.
- It rains in successive torrents.
-
- ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
- An ill-considered undertaking may occasion the agony of death.
-
- ஆரக்கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
- A female with an inauspicious mark on the neck will prove an evil in a king’s palace.